Images
இந்தியா: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலை - காவல்துறை விசாரணை
ஹைதராபாத் நகரில் இளம் பெண்ணின் கருகிய சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
அந்த 27 வயதுப் பெண், மருத்துவரைக் காணச் சென்ற பிறகு புதன்கிழமை (நவம்பர் 27) மாலை காணாமற்போனார்.
அவருடைய கருகிய உடல் மறுநாள் காலை கண்டுபிடிக்கப்பட்டதாக BBC தெரிவித்துள்ளது.
பெண்ணைக் கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகக் காவல்துறை நம்புகிறது.
சம்பவம் தொடர்பில் நான்கு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியச் சட்டத்தின்படி பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்களின் அடையாளம் வெளியிடப்படக்கூடாது.
ஆனால் நேற்று அவருடைய பெயர் Twitterஇல் வெகுவாகப் பரவியது.
அவருக்கு நீதி கேட்டுப் பலர் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.