Images
  • Indian Visa
    (படம்: CNA)

சிங்கப்பூரர்களுக்கான இந்திய விசா கட்டணம் குறைகிறது


இந்தியா செல்லும் சிங்கப்பூரர்களுக்கான விசா கட்டணம், குறையவிருக்கிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லாத காலமான ஏப்ரல் முதல் ஜூன் மாதம்வரை, சிங்கப்பூர், ஜப்பான், இலங்கைப் பயணிகளுக்கு மட்டும் விசா கட்டணம், 10 டாலராக இருக்கும்.

அந்த மூன்று நாட்டுக் குடிமக்களுக்கும், மற்ற மாதங்களில் 30 நாள்களுக்குச் செல்லுபடியாகும் இணையவழிச் சுற்றுலா விசா 25 டாலராக இருக்கும்.

அதேவேளையில், ஓராண்டுக்கும் 5 ஆண்டுக்கும் செல்லுபடியாகும் சாதாரணச் சுற்றுலா விசாவுக்கும் அவர்கள் 25 டாலர் கட்டணம் செலுத்தினால் போதும்.

இந்தியப் பயணத் துறை அமைச்சர் பிரஹ்லாத் பட்டேல், அதனை அறிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில், இந்தியாவுக்கு அதிகமான சுற்றுப்பயணிகள் செல்கின்றனர்.

அந்த உச்ச காலத்தில் இந்தியாவுக்குச் சுற்றுலா செல்லும் மற்ற நாட்டுக் குடிமக்களுக்கு, 25 டாலர் கட்டணத்தில் 30-நாள் இணையவழி விசா வழங்கப்படும்.

அதேபோல், 80 டாலர் கட்டணத்துடன் கூடிய புதிய 5 ஆண்டு இணையவழி விசா, 40 டாலர் கட்டணத்துடன் கூடிய ஓராண்டு இணையவழி விசா ஆகியவற்றை வருங்காலத்தில் வழங்க, இந்தியா திட்டமிடுகிறது.

The Hindu நாளேட்டின் இணையத்தளம் அந்த விவரங்களைத் தெரிவித்தது.  

Top