Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிறார் திருமணத்துக்குத் தடை - இந்தோனேசியா பரிசீலனை

இந்தோனேசியா, சிறார் திருமணத்துக்குத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலனை செய்து வருகிறது.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியா, சிறார் திருமணத்துக்குத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலனை செய்து வருகிறது.

15 வயதுப் பையனும் 14 வயதுச் சிறுமியும் பதிவுத் திருமணம் செய்து கொள்ள முயன்றதைக் காட்டும் படம் ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து அது பற்றிய அக்கறை எழுந்துள்ளது.

பெண் பிள்ளைகள் 18 வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகம் பதிவாகும் 10 நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியாவும் உள்ளது.

அத்தகைய திருமணங்களுக்குத் தடை விதிக்கும் ஆணையில் கையெழுத்திட இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ இணங்கியிருப்பதாக மகளிர் மேம்பாடு, சிறார் பாதுகாப்பு அமைச்சு கூறியது.

திருமணம் செய்துகொள்வதற்கான குறைந்தபட்ச வயதை பெண்களுக்கு 20ஆகவும் ஆண்களுக்கு 22ஆகவும் உயர்த்த அந்த அமைச்சு அரசாங்கத்துக்கு நெருக்குதல் அளித்து வருகிறது.

இந்தோனேசியச் சட்டப்படி பெண்கள் 16 வயதிலும், ஆண்கள் 19 வயதிலும் பெற்றோரின் அனுமதியோடு திருமணம் செய்துகொள்ளலாம்.

சமய நீதிமன்றம் அனுமதி வழங்கினால், பெண்கள் அதைவிட இளம் வயதில் திருமணம் செய்துகொள்ளலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்