Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கிருமிப்பரவலை முறியடிப்பதில், இந்தோனேசியாவுக்கு உதவ உறுதி அளித்த சீனா

இந்தோனேசியா, கிருமிப்பரவலை எதிர்த்துப் போராடுவதில் உதவ, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) உறுதியளித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியா, கிருமிப்பரவலை எதிர்த்துப் போராடுவதில் உதவ, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) உறுதியளித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நேற்று, பெரிய அளவிலான தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

அங்கு, சீன நிறுவனமான Sinovac Biotechஇன் தடுப்பூசிகள் போடப்பட்டுவருகின்றன.

தடுப்பூசி போடுவதில், ஊழியரணியிலுள்ள 18 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைபட்டவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்று இந்தோனேசியா தெரித்துள்ளது.

Sinovac தடுப்பூசி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பாதுகாப்பானதா என்பதுபற்றி மறுஆய்வு நடத்த, அதிகாரிகள் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த வயதினருக்கான மூன்றாம் கட்டச் சோதனைகள் இன்னும் முடிவடையவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்