Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Merck & Co நிறுவனத்தின் COVID-19 மாத்திரைகளை வாங்க இந்தோனேசியா பேச்சுவார்த்தை

இந்தோனேசியா Merck & Co நிறுவனத்தின் COVID-19 மாத்திரைகளை வாங்க இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டுவருகிறது.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியா Merck & Co நிறுவனத்தின் COVID-19 மாத்திரைகளை வாங்க இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டுவருகிறது.

அந்தத் தகவலை அந்நாட்டுச் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டது.

molnupiravir என்றழைக்கப்படும் அந்த மாத்திரை சோதனைப் பரிசோதனையில் உள்ளது.

அந்த மாத்திரைகளின் முதல் தொகுதியை இவ்வாண்டு இறுதிக்குள் பெற இந்தோனேசியா எண்ணம் கொண்டுள்ளது.

எத்தனை மாத்திரைகளை வாங்கப்போகிறது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

அடுத்தக்கட்ட நோய்ப்பரவல் ஏற்படும்போது தயார்நிலையில் இருக்கவேண்டும் என்று இந்தோனேசிய சுகாதார அமைச்சு கூறியது.

இந்தோனேசியாவில் தொழிற்சாலை அமைக்கவும் Merck & Co நிறுவனத்தை அது கேட்டுக்கொண்டுள்ளது

நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களைக் காப்பாற்ற அந்த மாத்திரைகள் பெரிய அளவில் உதவும் என்று ஆரம்பக்கட்ட ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவதாக Merck & Co அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளது.

மாத்திரைகளை அவசரத் தேவைக்கு பயன்படுத்த Merck நிறுவனம் அமெரிக்காவில் ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்துள்ளது.

- Reuters/kg

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்