Images
  • indo (3)
    படம்: REUTERS

இந்தோனேசியா, மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்: உலகச் சுகாதார நிறுவனம்

இந்தோனேசியா, கிருமிப்பரவல் நெருக்கடியைச் சமாளிக்க, மேலும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கூடுதலான இடங்களில் விதிக்கவேண்டும் என உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

நோய்ப்பரவல் சூழலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தோனேசியா உருவெடுத்திருக்கிறது.

அங்கு கிருமித்தொற்றால் தினசரி மடிவோர் எண்ணிக்கை, ஆயிரத்து 300-ஐத் தாண்டிவிட்டது.

உலகிலேயே ஆக அதிக எண்ணிக்கையில் மக்கள் கிருமித்தொற்றுக்குப் பலியாகும் நாடுகளில் அதுவும் ஒன்று.

உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை இந்தோனேசிய அரசாங்கம் பரிசீலனை செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் அவற்றை அது விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் குறைவு என்ற கருத்தும் நிலவுகிறது.

Top