Images
  • photo indo
    (படம்: AP)

இந்தோனேசியா: 200 மில்லியன் வாக்காளர்களின் விவரங்களை வெளியிடப்போவதாக இணைய ஊடுருவி மிரட்டல்

இந்தோனேசியாவில், 2.3 மில்லியன் வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியானதன் தொடர்பில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

அந்த விவரங்கள் நேற்று முன்தினம், ஓர் இணைய ஊடுருவியின் இணையப்பக்கத்தில் வெளியாயின.

அத்துடன் மேலும் 200 மில்லியன் பேரின் விவரங்களை வெளியிடப்போவதாகவும் அப்பக்கத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டது.

அந்தச் செயலை யார் செய்தது என்ற விவரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

வாக்காளர்களின் விவரங்கள் அடையாளத் திருட்டுக்கும் மோசடிக்கும் பயன்படுத்தப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வாக்காளர்களின் வீட்டு முகவரிகளும் தேசிய அடையாள எண்களும் பகிரப்பட்டன.

அந்தத் தகவல்கள் உண்மையானவை என்பதை இந்தோனேசியாவின் தேர்தல் ஆணையம் உறுதி செய்தது.

ஆணையத்தின் சேவையகங்களிலிருந்து அந்தத் தகவல்கள் வெளியானதை மறுத்த ஆணையம், சில தகவல்கள் அரசியல் கட்சிகளோடும், அதிபர் வேட்பாளர்களோடும் பகிரப்பட்டதைச் சுட்டியது.

கடந்த ஆண்டு நடந்த தேசிய, மாநில தேர்தல்களில், 192 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.  

Top