Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா: அதிபர் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இந்தோனேசியாவில் எதிர்வரும் அதிபர் தேர்தலை முன்னிட்டு இராணுவத்தையும் காவல்துறையையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா: அதிபர் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

படம்: REUTERS

இந்தோனேசியாவில் எதிர்வரும் அதிபர் தேர்தலை முன்னிட்டு இராணுவத்தையும் காவல்துறையையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

38,000 அதிகாரிகள் வரை அதில் ஈடுபட்டுள்ளதாக ஜக்கர்த்தா போலீஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

அண்மை ஆண்டுகளில் தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்காகிவரும் இந்தோனேசியாவில், பாதுகாப்பு அதிக அக்கறைக்குரிய அம்சமாக உள்ளது.

வரும் 17ஆம் தேதியன்று நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் 192 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

வாக்களிப்பு தினமான புதன்கிழமைக்கு முந்திய 3 நாள்கள், பிரசாரத்துக்கு அனுமதியில்லை.

6 மாதங்கள் நீடித்த பிரசாரம் நேற்றிரவோடு முடிவடைந்தது.

தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவிற்கும் சிறப்புப் படையின் முன்னாள் தளபதி பிராபோவோ சுபியாந்தோவிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இரண்டு வேட்பாளர்களும் இந்தோனேசியாவிற்கான தங்களது தொலைநோக்குத் திட்டங்களை முன்வைத்தனர்.

தமது முதல் தவணைக் காலத்தில் உருவாக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை முன்னிறுத்திப் பிரசாரம் செய்தார், திரு. விடோடோ.

மாறாக, இந்தோனேசியா தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறி வாக்குச் சேகரித்தார் திரு. பிராபோவோ.

"இந்தோனேசியாவிற்கு முன்னுரிமை" என்னும் கொள்கையை அவர் வாக்காளர்களிடம் வலியுறுத்திவந்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்