Images
  • indo flood
    ( படம் : AFP )

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு: 10 பேர் பலி

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் 10 பேர் மாண்டனர்.

வட சுமத்ரா மாநிலத்தில் அமைந்துள்ள 24 கிராமங்கள் வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமையிலிருந்து அங்கு கடுமையான மழை பொழிந்து வருகிறது.

இஸ்லாமிய சமயப் பள்ளியொன்று நிலச்சரிவில் மூழ்கடிக்கப்பட்டதில், 10 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.       

Top