Images
  • Flash flood
    படம்: Twitter@binman_resjypr

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம் : குறைந்தது 42 பேர் பலி

இந்தோனேசியாவின் பாப்பூவா (Papua) மாநிலத்தில் உள்ள ஜெயப்புரா (Jayapura) வட்டாரத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது 42 பேர் மாண்டனர்; மேலும் 21 பேர் மோசமாகக் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், மாண்டோரின் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

மீட்புப் பணிகள் தொடரும் வேளையில், அந்த சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Top