Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவின் பாப்புவா மாநிலத்தில் திடீர் வெள்ளம் - மாண்டோர் எண்ணிக்கை 104க்கு உயர்வு

இந்தோனேசியாவின் பாப்புவா (Papua) மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை 104க்கு உயர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவின் பாப்புவா மாநிலத்தில் திடீர் வெள்ளம் - மாண்டோர் எண்ணிக்கை 104க்கு உயர்வு

(படம்: AFP/Netty Dharma Somba)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தோனேசியாவின் பாப்புவா (Papua) மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை 104க்கு உயர்ந்துள்ளது.

அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 6,000 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

அந்தப் பேரிடரால் 350 வீடுகள் அழிந்து விட்டதாக அதிகாரத்துவ தகவல்கள் தெரிவித்தன.

மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் கடுமையாகச் சேதமடைந்தன.

மலைப்பகுதிகளில் ஏற்பட்ட சேதத்தால், சாலைகளைக் கடந்துசெல்ல முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாலங்களும் உடைந்துள்ளன. அதனால், மீட்புக் குழு அந்த இடங்களுக்கு செல்லப் போராடி வருகிறது.

கடந்த சனிக்கிழமை தொடங்கிய திடீர் வெள்ளத்தால்,
மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசாங்க உதவி கிடைப்பதை உறுதி செய்ய அங்கு இரண்டு வார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்