Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவின் சில மாநிலங்களில் காற்றின் தரம் ஆபத்தான நிலையில்

இந்தோனேசியா தன்னைச் சுற்றியுள்ள வட்டாரத்தில் புகைமூட்டம் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவின் சில மாநிலங்களில் காற்றின் தரம் ஆபத்தான நிலையில்

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

இந்தோனேசியா தன்னைச் சுற்றியுள்ள வட்டாரத்தில் புகைமூட்டம் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்நாட்டின் தேசிய ஊடகம் எல்லாப் பண்ணைகளிலும் தீயை அணைப்பதற்கான மனிதவளமும் பொருள்களும் இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளது.

கடந்த மாதத்தில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட பல வட்டாரங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்தோனேசியாவின் ரியாவ் (Riau) தீவில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த போராடி வரும் வேளையில் அங்கு காற்றின் தூய்மை ஆபத்தான நிலையை எட்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ரியாவில் மட்டும் 150க்கும் மேற்பட்ட இடங்களிலும் பக்கத்து மாநிலத்தில் சுமார் 200 இடங்களிலும் காட்டுத் தீ பற்றி எரிவதாகக் கூறப்படுகிறது.

ரியாவில் மட்டும் காற்றுத் தூய்மைக் கேட்டின் அளவு 331ஆக இருந்தது.
அங்கு 330 ஆபத்தான நிலை என வரையறுக்கப்பட்டுள்ளது.

மத்தியக் கலிமந்தான், சுமத்ரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் காற்றின் தூய்மை ஆபத்தான நிலையைத் தொட்டது அல்லது ஆபத்தான நிலையை நெருங்கியது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்