Images
  • forest fire
    (படம்: AFP/ABDUL QODIR)

இந்தோனேசியா: காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த, கூடுதல் வளங்கள் பயன்படுத்தப்படும்

சுமாத்ரா, கலிமந்தான் பகுதிகளில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த, கூடுதல் வளங்களைப் பயன்படுத்தவிருப்பதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

அரசியல், சட்ட, பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விரான்டோ (Wiranto) அது பற்றி செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

காட்டுத் தீ எரியும் பகுதிகளில், மழையை ஏற்படுத்த கூடுதல் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், சில வேளைகளில் சுமார் 300 மீட்டர் வரை மட்டுமே பார்க்க முடிகிறது.

அதன் காரணமாக, சுமாத்ரா தீவில், விமான நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளது.

பல விமானச் சேவை நிறுவனங்கள், விமானச் சேவைகளை ஒத்தி வைத்துள்ளன.

ரியாவ் , ஜாம்பி மாநிலங்களில், காற்றின் தரம், அபாயகரமான அளவை எட்டியிருக்கிறது.
அங்கு பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

Top