Images
  • Bangladeshis Crammed
    (படம்: AFP/HENDRA BROETAL)

இந்தோனேசியா: வெளிச்சத்துக்கு வந்துள்ள ஆள்கடத்தல் விவகாரம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், ஆள் கடத்தல் விவகாரம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேடானில், பங்களாதேஷ் ஆடவர்கள் 190க்கும் மேற்பட்டோர் ஒரு கட்டடத்தில் அடைத்து வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

அந்த கட்டடத்திலிருந்து சந்தேகத்துக்கிடமான வகையில் சத்தம் வந்ததால் அருகிலிருந்த குடியிருப்பாளர்கள் காவல் துறையிடம் புகார் செய்தனர்.

மலேசியாவில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, அவர்களை ஆள்கடத்தலில் ஈடுபடுவோர் அழைத்து வந்ததாக அதிகாரிகள் கூறினர்.

சுற்றுப் பயணிகளுக்கான விசாவைப் பயன்படுத்தி அவர்கள் இந்தோனேசியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் தற்போது குடி நுழைவுத் தடுப்புக்காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விரைவில் அவர்கள் பங்களாதேஷுக்குத் திருப்பி அனுப்பப்படுவர். 

Top