Images
  • Forest Fire
    படம்: AFP

ஆசியான் வட்டாரத்தில் காட்டுத் தீ எரியும் இடங்களில் பெரும்பாலானவை இந்தோனேசியாவில் உள்ளன

ஆசியான் வட்டாரத்தில் கடந்த சுமார் ஒரு மாதமாகக் கண்டறியப்பட்ட காட்டுத் தீ எரியும் இடங்களில் பெரும்பாலானவை இந்தோனேசியாவில் உள்ளன.

ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு நிலையம் அதனைத் தெரிவித்தது.

இயற்கையாக மூளும் காட்டுத் தீ, வேண்டுமென்றே மூட்டப்படுவதால் ஏற்படும் தீ ஆகியவற்றால் மலேசியா உள்ளிட்ட வட்டார நாடுகளில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.

ஆசியான் வட்டாரத்திலுள்ள சுமார் 1,100 இடங்களில் காட்டுத் தீ எரிவதாக ஆய்வு நிலையம் குறிப்பிட்டது.

இந்தோனேசியாவில் கலிமந்தான், சுமத்ரா, ஜாவா, சுலாவெசி ஆகிய வட்டாரங்களில் காட்டுத் தீ பற்றியுள்ளது.

காட்டுத் தீ பற்றியெரியும் இடங்களில் 6 விழுக்காட்டு இடங்கள் சபா, சரவாக் உள்ளிட்ட மலேசியப் பகுதிகளில் உள்ளன.

தாய்லந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் மொத்தம் 150 இடங்களில் காட்டுத் தீ எரிகிறது.

மியன்மார், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலும் காட்டுத் தீ எரிவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Top