Images
  • syria and isis (1)
    (படம்: Rodi Said/Reuters)

ஐ எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்தோரைச் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை - இந்தோனேசியா

சிரியாவில் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளோரைத் திருப்பி அழைத்து வரப்போவதில்லை என்று இந்தோனேசியா கூறியுள்ளது.

அதனால், சிரியாவில் உள்ள இந்தோனேசியர்கள் சுமார் 700 பேர் நாடற்றவர்களாகக் கருதப்படுவர்.

சென்ற ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்கக் கூட்டுப் படையினர், ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தை வீழ்த்தினர்.

பாதிக்கப்பட்ட அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் தற்போது சிரியாவின் அகதி முகாம்களில் உள்ளனர்.

குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிரியாவில் உள்ள இந்தோனேசியர்களைத் திரும்ப அழைப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளதாய் இந்தோனேசியப் பாதுகாப்பு அமைச்சர் மஃபுது முகமது (Mahfud Mohamed) கூறினார்.

பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் திரும்ப வந்தால், அவர்கள் புதிய நச்சுக் கிருமியாய் உருவெடுத்து, நாட்டிலுள்ள 267 மில்லியன் பேரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் அமையக்கூடும் என்றார் அவர்.  

Top