Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா: நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

இந்தோனேசியா: நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா: நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

கோப்புப் படம்: AFP

இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் நடப்பிலுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அங்கே அதிகரித்துவருவதை முன்னிட்டு, அடுத்த மாதம் 11ஆம் தேதிவரை சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும்.

உணவு, நிதி, கட்டுமானம் ஆகிய அத்தியாவசியச் சேவை வழங்கும் துறைகள் மட்டும், தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

இருப்பினும், அவை வழக்கமான ஊழியர்களில் பாதிப்பேரைக் கொண்டுமட்டுமே சேவையளிக்கலாம்.

நேற்றைய நிலவரப்படி, இந்தோனேசியாவில் புதிதாக 4,634 பேரிடம் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 262,022ஆக உயர்ந்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்