Images
  • Pray
    படம்: REUTERS

இந்தோனேசியா: மழை வேண்டி மக்கள் பிரார்த்தனை

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் ஆயிரக்கணக்கானோர் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.

தற்போது சுமத்ரா தீவுவில் வறட்சி காரணமாகக் கடந்த ஒரு மாதமாகக் காட்டுத் தீச் சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அதனால் அங்கு புகைமூட்டம் அதிகரித்து வருகிறது.

தீயை அணைக்க 9,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

சில சமூகத்தினர் தீ கட்டுக்குள் வரவும் மழைபெய்து வறட்சி நீங்கவும் ஆளுநர் அலுவலகத்துக்கு வெளியே பிரார்த்தனை செய்துவருகின்றனர்.

பிரார்த்தனையின்போது புகைமூட்டத்தில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் முகக்கவசங்களை அணிந்திருந்தனர்.

காட்டுத் தீயால் வரும் புகை இந்தோனேசியாவைச் சுற்றியுள்ள நாடுகளையும் பாதித்துள்ளது.   

Top