Images
  • indo plane crash (1)
    (படம்: AFP/Handout)

விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிர்பிழைத்த 12 வயதுச் சிறுவன்

கிழக்கு இந்தோனேசியாவின் மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் எட்டுப் பேர் மாண்டனர். ஒரு 12 வயதுச் சிறுவன் மட்டுமே உயிர்பிழைத்தான்.

ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடனான விமானத்தின் தொடர்பு பாதிப் பயணத்தின்போது துண்டிக்கப்பட்டு விமானம் நேற்று மாயமாய் மறைந்தது.

சுவிட்ஸர்லந்தில் தயாரிக்கப்பட்ட அந்த பிலாட்டஸ் ரக விமானம், ஒக்சிபில் (Oksibil) வட்டாரத்தின் காட்டுப்பகுதியில் இன்று காலை காணப்பட்டது.

ஆள் நடமாட்டமில்லாத பாப்புவா (Papua) மாநிலத்தில் Dimonim Air நிறுவனத்தின் அந்த விமானம் பயணம் செய்துகொண்டிருந்தது.

பயண நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே.

விமானம் விழுந்து நொறுங்கியதன் காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதுகுறித்த விசாரணை நடைபெறும் என்று பாப்புவாவின் ராணுவ அதிகாரி கூறினார்.

Top