Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஸ்ரீவிஜயா விமான விபத்து:விசாரணை நடத்தவுள்ள அமெரிக்க விமானத்துறை நிபுணர்கள்

இந்தோனேசியாவில் விழுந்து நொறுங்கிய ஸ்ரீவிஜயா (Sriwijaya) விமானம் தொடர்பிலான விசாரணையை நடத்த அமெரிக்க விமானத்துறை நிபுணர்கள் ஜக்கர்த்தா (Jakarta) சென்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஸ்ரீவிஜயா விமான விபத்து:விசாரணை நடத்தவுள்ள அமெரிக்க விமானத்துறை நிபுணர்கள்

(படம்: AP Images)

இந்தோனேசியாவில் விழுந்து நொறுங்கிய ஸ்ரீவிஜயா (Sriwijaya) விமானம் தொடர்பிலான விசாரணையை நடத்த அமெரிக்க விமானத்துறை நிபுணர்கள் ஜக்கர்த்தா (Jakarta) சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு கழகம், மத்திய விமானத்துறை நிர்வாகம், Boeing, General Electric நிறுவனங்கள் முதலியவற்றின் அதிகாரிகள் அந்தக் குழுவில் அடங்குவர்.

சிங்கப்பூரின் போக்குவரத்துப் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் அவர்களுடன் பணியாற்றவுள்ளனர்.

விமானத்தின் இரண்டாவது தகவல், குரல் பதிவுப் பெட்டியைக் கண்டுபிடிக்க, மீட்புப் பணியாளர்கள், தீவிரமாக முயன்று வருகின்றனர்.

சுமார் 4,000 பணியாளர்கள் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

62 பயணிகள் இருந்த அந்த விமானம் கடந்த சனிக்கிழமை ஜக்கர்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கடலில் விழுந்து நொறுங்கியது.

26 ஆண்டுகளாகச் சேவையிலிருந்த அந்த விமானம், நோய்ப்பரவல் காரணத்தினால் கடந்த ஆண்டின் 9 மாதங்களுக்குச் சேவையிலிருந்து முடக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த மாதம் விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு முன்னதாய்ச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக விமான நிறுவனமும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்