Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசிய அதிபராக 2ஆவது தவணைக்குப் பதவியேற்றார் ஜோக்கோ விடோடோ

இந்தோனேசியாவில் திரு. ஜோக்கோ விடோடோ அதிகாரபூர்வமாக இரண்டாவது தவணைக்கு அதிபராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவில் திரு. ஜோக்கோ விடோடோ அதிகாரபூர்வமாக இரண்டாவது தவணைக்கு அதிபராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே, நாடாளுமன்றத்தில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.

பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதால் திரு. விடோடோவின் பதவியேற்புச் சடங்கு சற்றுத் தாமதமடைந்தது.

சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங், பதவியேற்புச் சடங்கில் கலந்துகொண்டார்.

அவர் தவிர, மலேசியா, புருணை, ஆஸ்திரேலியா, கம்போடியா, சுவாஸிலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பதவியேற்புச் சடங்கில் பங்கேற்க ஜக்கர்த்தாவிற்குப் பயணம் மேற்கொண்டனர்.

இந்தோனேசியாவுடனான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ள உலகத் தலைவர்கள் ஆர்வம் தெரிவித்தனர்.

அண்மைக் காலமாக இந்தோனேசியா, ஆப்பிரிக்கா போன்ற வழக்கத்துக்கு மாறான சந்தைகளில் தனது வர்த்தகத்தையும் முதலீடுகளையும் விரிவுபடுத்த முயன்று வருகிறது.

பதவியேற்புச் சடங்கை முன்னிட்டு, காவல் துறையையும் ராணுவத்தையும் சேர்ந்த சுமார் 31-ஆயிரம் பேர் ஜக்கர்த்தாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமது இரண்டாவது, இறுதிப் பதவிக் காலத்தில் அதிகமான முதலீடுகளை ஈர்க்க திரு. விடோடோ உறுதி கூறியிருக்கிறார்.

மேலும் இந்தோனேசியாவின் மனிதவளத் துறையை மேம்படுத்துவதில் தனிக் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்