Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

விதிமுறைகளை மீறுவோரை அவமானப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள்

இந்தோனேசிய அதிகாரிகள், சமூக இடைவெளி விதிமுறைகளை  மீறுவோரைச் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
விதிமுறைகளை மீறுவோரை அவமானப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள்

படம்: AFP

இந்தோனேசிய அதிகாரிகள், சமூக இடைவெளி விதிமுறைகளை மீறுவோரைச் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

COVID-19 நோய்வாய்ப்பட்டோரின் எண்ணிக்கை இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் வேளையில், அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

சமூக இடைவெளியை மீறுவோரைப் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் காவல்துறை அதிகாரிகள் பதிவேற்றம் செய்கின்றனர்.

சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்வதாக காவல்துறை முதன்மை அதிகாரி ஒருவர் கூறினார்.

COVID-19 தொடர்பான நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்காக சுமார் 340,000 அதிகாரிகளை இந்தோனேசியா பணியில் அமர்த்தியுள்ளது.

இந்தோனேசியாவில் இதுவரை சுமார் 24,500 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 1,500 பேர் மாண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்