Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பொதுத் துறை ஊழியர்களிடையே தீவிரவாத ஆதரவுப் போக்கை முறியடிக்க முனைப்புடன் செயல்படுகிறோம்: இந்தோனேசியத் துணையதிபர்

இந்தோனேசியாவில் பொதுத் துறை ஊழியர்களிடையே தீவிரவாத ஆதரவுப் போக்கை முறியடிக்கத் தேவையான முயற்சிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தோனேசியத் துணையதிபர் மஃரூஃப் அமீன் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
பொதுத் துறை ஊழியர்களிடையே தீவிரவாத ஆதரவுப் போக்கை முறியடிக்க முனைப்புடன் செயல்படுகிறோம்: இந்தோனேசியத் துணையதிபர்

(படம்: Try Sutrisno Foo/ CNA)

இந்தோனேசியாவில் பொதுத் துறை ஊழியர்களிடையே தீவிரவாத ஆதரவுப் போக்கை முறியடிக்கத் தேவையான முயற்சிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தோனேசியத் துணையதிபர் மஃரூஃப் அமீன் கூறியுள்ளார்.

CNA வுக்குப் அளித்த பிரத்யேகப் பேட்டியின்போது அவர் அவ்வாறு கூறினார்.

சிலர் உள்நாட்டுக் கல்லூரிகளால் தீவிரவாத ஆதரவுப் போக்கின்பால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

இன்னும் சிலருடைய ஆர்வத்துக்கு வெளிநாடுகள் காரணம்.

அவர்களைப் பொதுத் துறைப் பணிக்கு எடுக்கும்போது அது பற்றி அடையாளம் காண்பது, சோதனை நடைமுறையின் ஓர் அங்கமாக இல்லை என்றார் திரு. மஃரூஃப்.

பல்வேறு ஆய்வுக்குப் பிறகு, பொதுத் துறை ஊழியர்களை வேலைக்கமர்த்தும் நடைமுறைகளை சீரமைத்து வருவதாக அவர் சொன்னார்.

அதன்படி, பொதுத் துறை ஊழியர்கள் தீவிரவாத ஆதரவுப் போக்கினால் ஈர்க்கப்பட்டவர்களா என்பதைக் கணிக்க முடியும் என்று திரு. மஃரூஃப் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்