Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா: சமய போதகர் ரீஸீக் ஷிஹாப் ஆதரவாளர்களின் பேரணிக்கு அனுமதியில்லை - காவல்துறை

இந்தோனேசியாவில் அடுத்த மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அந்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா: சமய போதகர் ரீஸீக் ஷிஹாப் ஆதரவாளர்களின் பேரணிக்கு அனுமதியில்லை - காவல்துறை

(கோப்புப் படம்: REUTERS/Willy Kurniawan)

இந்தோனேசியாவில் அடுத்த மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அந்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் சர்ச்சைக்குரிய சமய போதகர் ரீஸீக் ஷிஹாப்பின் (Rizieq Shihab) ஆதரவாளர்கள் ஒன்றுகூடத் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா நோய்ப்பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகளுக்கு இணங்க, பேரணிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதற்குமுன் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் பங்கேற்ற குழுக்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியாக அடுத்த மாதப் பேரணிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், அஹோக் (Ahok) என்று அழைக்கப்படும் அப்போதைய ஜக்கர்த்தா ஆளுநர் பாஸுகி ஜஹாஜ புர்னாமாவுக்கு (Basuki Jahaja Purnama) எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்