Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாலித் தீவுக்கு நாளை மறுநாள் முதல் 18 நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் செல்லலாம்

இந்தோனேசியாவின் பாலித் தீவுக்கு நாளை மறுநாள் முதல் 18 நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
பாலித் தீவுக்கு நாளை மறுநாள் முதல் 18 நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் செல்லலாம்

(படம்: AFP/SONNY TUMBELAKA)

இந்தோனேசியாவின் பாலித் தீவுக்கு நாளை மறுநாள் முதல் 18 நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

சுற்றுப்பயணத் துறைக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில் இந்தோனேசியா தனது எல்லைகளை மீண்டும் திறந்து விடுகிறது.

எந்தெந்த நாடுகளிலிருந்து பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்பதை இந்தோனேசிய அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவில்லை.

ஆனால் அந்த நாடுகளில் சிங்கப்பூர் இல்லை என்று அவர்கள் கூறினர்.

கிருமிப்பரவல் குறைவாக உள்ள நாடுகள் மட்டுமே திட்டத்தில் சேர்க்கப்படும் என்று இந்தோனேசியாவின் கிருமித்தொற்று நிலவரத்தைக் கண்காணிக்கும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாத்தாம், பின்தான் தீவுகளுக்கும் வரும் வியாழக்கிழமையிலிருந்து வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

பயணிகள், COVID-19 சிகிச்சைக்கான காப்புறுதியை வைத்திருக்கவேண்டியது கட்டாயம்.

இதற்கிடையே, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள சுற்றுப்பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் காலத்தை இந்தோனேசியா 8 நாளிலிருந்து 5-க்குக் குறைத்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்