Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா: சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் கைபேசிகள் - தடுக்க புதிய விதிமுறைகள்

இந்தோனேசியா சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் கைபேசிகளைத் தடுக்க புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா: சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் கைபேசிகள் - தடுக்க புதிய விதிமுறைகள்

(படம்: AP)

இந்தோனேசியா சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் கைபேசிகளைத் தடுக்க புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. 

அதன்மூலம் கள்ளச் சந்தைகளில் திறன்பேசிகளின் விற்பனையைத் தடுக்க முடியும். முதலீட்டாளர்களை இந்தோனேசியாவிலேயே கைபேசிகளைத் தயாரிக்க வைப்பது அதன் இலக்கு.

ஆண்டுதோறும் இந்தோனேசியாவில் 60 மில்லியன் கைபேசிகள் விற்கப்படுகின்றன.

புதிய விதிமுறைகள்மூலம் சந்தையில் சமமான அளவு போட்டி நிலவும் என்றார் தொழில் அமைச்சர் அர்லங்கா ஹர்தார்டோ.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் கைபேசிகளால் ஆண்டுதோறும் சுமார் 141 மில்லியன் டாலரை இந்தோனேசியா இழக்கிறது. கைபேசிகளை இறக்குமதி செய்வதற்கு இந்தோனேசியா வரிகளை விதிப்பதில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்