Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அமெரிக்காவுக்கு 5 கொள்கலன் குப்பையைத் திருப்பியனுப்பியது இந்தோனேசியா

இந்தோனேசியா அமெரிக்காவுக்கு 5 கொள்கலன்களில் குப்பையைத் திருப்பியனுப்பியுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியா அமெரிக்காவுக்கு 5 கொள்கலன்களில் குப்பையைத் திருப்பியனுப்பியுள்ளது.

குப்பை அமெரிக்காவிலிருந்து இந்தோனேசியாவின் சுரபயா நகருக்கு மார்ச் மாத இறுதியில் அனுப்பப்பட்டது.

குப்பையில் காகிதம், பிளாஸ்டிக், போத்தல்கள், குழந்தை அணையாடை ஆகிய பொருள்கள் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

குப்பையில் காகிதம் மட்டுமே இருந்ததாக சுங்கச் சோதனைச் சாவடியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்பில் இந்தோனேசியா குப்பையைக் குவிக்கும் இடமல்ல என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு கண்டனம் தெரிவித்திருந்தது.

தற்போது ஜக்கர்த்தா துறைமுகம், பாத்தாம் ஆகியவற்றில் சோதனை நடந்துவருகிறது.

சென்ற மாதம் மலேசியாவிற்குள் கொண்டுவரப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் அந்தந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்பப்படும் என்று மலேசியா தெரிவித்திருந்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்