Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: இந்தோனேசியாவில் தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடக்கம்

COVID-19: இந்தோனேசியாவில் தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடக்கம்

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவில் இன்று முதல் COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்குகின்றன.

நாட்டின் முதல் தடுப்பூசியை அதிபர் ஜோக்கோ விடோடோ போட்டுக்கொள்கிறார்.

ஆசிய வட்டாரத்தில் நோய்த்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா உள்ளது.

முதல் கட்டமாக 181.5 மில்லியன் பேருக்குத் தடுப்பூசியைப் போட இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. அவர்களுக்குச் சீனாவின் Sinovac Biotech நிறுவனத்தின் தடுப்பூசிகள் போடப்படும்.

Sinovac Biotech தடுப்பூசிகளின் செயல்திறன் 65.3 விழுக்காடு.

அதை அவசரத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று இந்தோனேசியா கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது.

பிப்ரவரி மாதத்திற்குள் நாட்டில் உள்ள 1.5 மில்லியன் சுகாதார பராமரிப்பு ஊழியர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்