Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியத் தேர்தல் முடிவுகளையொட்டி சந்தேக நபர்கள் கைது

இந்தோனேசிய பயங்கரவாத எதிர்ப்புப் படையினர், சந்தேக நபர்கள் பத்துப் பேரைக் கைது செய்துள்ளனர்.  

வாசிப்புநேரம் -
இந்தோனேசியத் தேர்தல் முடிவுகளையொட்டி சந்தேக நபர்கள் கைது

(படம்: AFP/Aman Rochman)

இந்தோனேசிய பயங்கரவாத எதிர்ப்புப் படையினர், சந்தேக நபர்கள் பத்துப் பேரைக் கைது செய்துள்ளனர்.

சென்ற மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள், அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள நிலையில், அவர்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஐ. எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய Jemaah Ansharut Daula என்னும் பெரிய குழுவொன்றின் உறுப்பினர்கள் அவர்கள்.

தேர்தல் ஆணையம், இம்மாதம் 22ஆம் தேதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கவுள்ளது. அதனையொட்டிப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் எனத் தனியார் கருத்தாய்வு நிறுவனங்கள் முன்னுரைத்துள்ளன. ஆணையமும் அதையே உறுதிப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்