Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவுக்கு 30 மில்லியன் முறைபோடத் தேவையான தடுப்பூசிகள் வந்து சேர்வதில் தாமதம்

இந்தோனேசியா, தனக்கு 30 மில்லியன் முறைபோடத் தேவையான AstraZeneca COVID-19 தடுப்பூசிகள் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியா, தனக்கு 30 மில்லியன் முறைபோடத் தேவையான AstraZeneca COVID-19 தடுப்பூசிகள் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இனி அவை அடுத்த ஆண்டு தான் வந்து சேரும் என்று கூறப்பட்டது.

இந்த ஆண்டு இருதரப்பு உடன்பாட்டின்வழி கிடைக்க வேண்டிய 50 மில்லியன் தடுப்பூசிகளில் முதலில் 20 மில்லியன் தடுப்பூசிகளை இந்தோனேசியா பெற்றுக்கொள்ளும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எஞ்சிய 30 மில்லியன் தடுப்பூசிகள் 2022ஆம் ஆண்டு இந்தோனேசியாவுக்கு அனுப்பப்படும் என்று அமைச்சர் பூடி குணாடி சடிக்கின் (Budi Gunadi Sadikin) நாடாளுமன்றத்தில் கூறினார்.

COVAX உலகளாவிய தடுப்பூசித் திட்டத்தின் வழியும் இந்தோனேசியா 54 மில்லியன் தடுப்பூசிகளைக் கட்டம் கட்டமாகப் பெறவிருப்பதாய் அவர் தெரிவித்தார்.

எனினும் இந்திய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளால் இந்த மாதம் வரவேண்டிய தடுப்பூசிகள் சற்று தாமதமாகக் கிடைக்கலாம் என்றும் அவர் கூறினார்.

- Reuters/zl 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்