Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா: நோய்ப்பரவல் கட்டுப்பாட்டுகளைச் செயல்படுத்தத் தவறிய காவல்துறைத் தலைமையதிகாரிகள் பணிநீக்கம்

இந்தோனேசியாவில், கொரோனா கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தத் தவறியதற்காக, ஜக்கர்த்தா (Jakarta), மேற்கு ஜாவா (Java) பகுதிகளுக்கான காவல்துறைத் தலைமையதிகாரிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா: நோய்ப்பரவல் கட்டுப்பாட்டுகளைச் செயல்படுத்தத் தவறிய காவல்துறைத் தலைமையதிகாரிகள் பணிநீக்கம்

(கோப்புப் படம்: REUTERS/Willy Kurniawan)

இந்தோனேசியாவில், கொரோனா கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தத் தவறியதற்காக, ஜக்கர்த்தா (Jakarta), மேற்கு ஜாவா (Java) பகுதிகளுக்கான காவல்துறைத் தலைமையதிகாரிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாமியத் தற்காப்பு அணி எனும் அமைப்பின் தலைவர் ரீஸீக் ஷிஹாப் (Rizieq Shihab) கலந்துகொண்ட பெரிய அளவிலான ஒன்றுகூடல்களுக்குப் பின் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் மூவாண்டு தஞ்சம் புகுந்திருந்த ரீஸீக் ஷிஹப்
நாடு திரும்பியதற்கும் காவல்துறைத் தலைமையதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கும் தொடர்பு உள்ளதா என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

எனினும் அவர்கள் அதை மறுக்கவும் இல்லை.

இந்தோனேசியாவில் புதிதாய் 3,500க்கும் கூடுதலான நோய்ச் சம்பவங்களும் 85 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அங்கு மொத்தம் 470,000 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்