Images
  • covid indo

இந்தோனேசியா: புதிய கிருமித்தொற்று மையமாக உருவெடுத்துள்ள கிழக்கு ஜாவா மாநிலம்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாநிலத்தில் COVID-19 நோய் கடுமையானதைத் தொடர்ந்து, தற்போது அது அந்நாட்டின் கிருமித்தொற்று மையமாக உருவெடுத்துள்ளது.

அங்கு சுமார் 11,000 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஜகர்த்தாவில் மட்டும் 10,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo) கிழக்கு ஜாவாவுக்கு நேரில் சென்று திரும்பிய சில நாள்களில், இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அந்த வட்டாரத்தில் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துமாறு அவர், மாநில நிர்வாகத்தை வலியுறுத்தினார். 

Top