Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

2016 வெடிகுண்டுத் தாக்குதல் : சந்தேக நபர்மீதான வழக்கு விசாரணை தொடர்கிறது

சுமார் 400 அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர் என்று காவல்துறை கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவின் தெற்குப் பகுதியிலுள்ள நீதிமன்றத்தில், சமயத் தலைவர் அமான் அப்துர் ரஹ்மான் மீதான வழக்கு விசாரணை இன்று இடம்பெறுகிறது.

சுமார் 400 அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர் என்று காவல்துறை கூறியுள்ளது.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய ஜக்கர்த்தாவில் நடத்தப்பட்ட தாம்ரீன் வெடிகுண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அமான் வித்திட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமானுக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் எந்தத் தாக்குதலுடனும் தமக்குத் தொடர்பில்லை என்று அமான் மறுத்துள்ளார்.

அந்தச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மனநலம் இல்லாதோர் என்பதால் அவை தாக்குதல்கள் அல்ல என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்