Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவின் புதிய தலைநகரம் இந்த ஆண்டிற்குள் முடிவு செய்யப்படும்

இந்தோனேசியாவின் புதிய தலைநகரம் இந்த ஆண்டிற்குள் முடிவு செய்யப்படும் என்று அந்நாட்டின் நகர்ப்புறத் திட்ட அமைச்சர் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவின் புதிய தலைநகரம் இந்த ஆண்டிற்குள் முடிவு செய்யப்படும்

(படம்: AFP/BAY ISMOYO)

இந்தோனேசியாவின் புதிய தலைநகரம் இந்த ஆண்டிற்குள் முடிவு செய்யப்படும் என்று அந்நாட்டின் நகர்ப்புறத் திட்ட அமைச்சர் கூறியுள்ளார்.

தேர்வு செய்யப்படும் இடம் 2024ஆம் ஆண்டிலிருந்து புதிய அரசாங்க மையமாகச் செயல்படத் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ இரண்டு வாரங்களுக்கு முன்னர் தலைநகரத்தை மாற்றுவது தொடர்பாகப் பேசியிருந்தார்.

தற்போதைய தலைநகர் ஜக்கர்த்தா அதிகப் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு கிட்டத்தட்ட 30 மில்லியன் பேர் வாழ்ந்து வருகின்றனர்.

ஜக்கர்த்தாவின் நிலத்தடி நீர்நிர்வாகம் சரியாகக் கட்டமைக்கப்படாததும் ஒரு குறையாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்