Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கிய சந்தேகத்தில் 24 பேர் கைது

இந்தோனேசியாவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கிய சந்தேகத்தில் 24 பேர் கைது

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கிய சந்தேகத்தில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஜமாஆ இஸ்லாமியா (Jemaah Islamiyah), அல் கயீடா (al Qaeda) போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டியதாகக் கூறப்படுகிறது.

நிதி இரண்டு இஸ்லாமிய அறக்கட்டளைகள் மூலம் பெறப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

நிதி அறிக்கைகளின்படி சுமார் 2 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டதாகத் தெரிகிறது.

ஜமாஆ இஸ்லாமியா (Jemaah Islamiyah) பயங்கரவாத அமைப்பு 2002ஆம் ஆண்டு பாலியில் 2 குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக நம்பபடுகிறது.

அந்தத் தாக்குதல்களில் 200-க்கும் அதிகமானோர் மாண்டனர்.

தலைநகர் ஜக்கர்த்தாவிலும் அந்த அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது.

- Reuters/aj 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்