Images
  • Instagram
    படம்: Pixabay 

இந்தோனேசியா: Instagram மூலம் குழந்தைகளை விற்ற 4 சந்தேக நபர்கள் கைது

குழந்தைகளை Instagram மூலம் விற்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பநல ஆணையம் ஒன்றின் Instagram கணக்கு எனக் குறிப்பிட்டு கர்ப்பிணிப் பெண்கள், ஸ்கேன் சோதனை, குழந்தைகள் ஆகிய படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

அதில் தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டிருந்தது. அதன்மூலம் உத்தேச வாடிக்கையாளர்களை WhatsApp மூலம் தொடர்புகொள்ள வைப்பது நோக்கம் என்று சுரபாயா காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒரு பரிவர்த்தனையை ஊடுருவ முடிந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விற்கப்பட்ட ஒரு குழந்தையைத் தேடும் பணியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.

அந்தக் கணக்கு குடும்பப் பிரச்சினைகளுக்கு ஆலோசனைச் சேவைகள் வழங்குவதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டது.


Top