Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவின் ரியாவ் மாநிலக் காவல்துறைத் தலைமையகத்தில், தாக்குதல் நடத்திய மூவரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்

இந்தோனேசியாவின் ரியாவ் மாநிலக் காவல்துறைத் தலைமையகத்தில்,  தாக்குதல் நடத்திய மூவரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவின் ரியாவ் மாநிலக் காவல்துறைத் தலைமையகத்தில், தாக்குதல் நடத்திய மூவரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்

(படம்: AFP/Aman Rochman)

இந்தோனேசியாவின் ரியாவ் மாநிலக் காவல்துறைத் தலைமையகத்தில், தாக்குதல் நடத்திய மூவரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

அவர்களில் ஒருவர் கூரான சமுராய்-ரகக் கத்தியைத் தாங்கியிருந்ததாகக் கூறப்பட்டது.

பெக்கான் பாரு நகரில் நடந்த அந்தத் தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் மாண்டார்.

அதிகாரிகள் இருவர் காயமடைந்ததாக Detik இணையத்தளம் கூறியது.

வேகமாக வந்த கார், காவல்துறைத் தலைமையகத்தின் வேலியைத் தகர்த்ததாகவும், அதிலிருந்து இறங்கிய முகமூடி அணிந்த நபர் அதிகாரிகளைத் தாக்கியதாகவும் இந்தோனேசிய ஊடகங்கள் தெரிவித்தன.

மாண்ட தாக்குதல்காரர்களில் ஒருவர் தனது உடலைச் சுற்றி வெடிகுண்டு போன்ற பொருளைக் கட்டியிருந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.

ஆடவர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்; ஆனால் நால்வர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றனர்.

இந்தோனேசியாவின் அரசாங்க ஊடகமான Antara, தாக்குதலில் செய்தியாளர்கள் இருவரும் காயமடைந்ததாகத் தகவல் வெளியிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்