Images
  • bali bombing
    (படம்: AFP)

இந்தோனேசியாவில் பாலி குண்டு வெடிப்பு நினைவு நாள் அனுசரிப்பு

இந்தோனேசியாவின் பாலி குண்டு வெடிப்பின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டு அக்டோபர் 12, சுற்றுப் பயணிகளின் சொர்க்கபுரி என்று அழைக்கப்படும் பாலி தீவில் இருந்தோருக்கு கடுமையான அதிர்ச்சி.

உல்லாசத் தலங்கள், கேளிக்கை விடுதிகள் உட்பட சில இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இந்தோனேசிய வரலாற்றில் நடத்தப்பட்ட ஆக மோசமான பயங்கரவாதத் தாக்குதலில் உலகின் 21 நாடுகளைச் சேர்ந்த 202 பேர் கொல்லப்பட்டனர்.

ஜமாஆ இஸ்லாமிய அமைப்பு தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அவற்றில் மாண்டோருக்காக ஹப் குட்டா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் பல்வேறு தூதரங்களைச் சேர்ந்த அதிகாரிகளும், மாண்டோரின் குடும்ப உறுப்பினர்களும் திரண்டனர்.

பூக்களைக் கிடத்தி, நறுமணப் பத்திகளைக் கொளுத்தி வைத்து அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.



 

Top