Images
  • Indo
    படம்: REUTERS 

COVID-19: இந்தோனேசியாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மேலும் 2 வாரங்களுக்குத் தடை

இந்தோனேசியா, வெளிநாட்டுப் பயணிகளுக்கு விதித்திருந்த தடையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.

COVID-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட புதுவகை கொரோனா கிருமி நாட்டிற்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்தோனேசியா இம்மாதம் முதல் தேதியிலிருந்து வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தடை விதித்தது.

புதுவகை கொரோனா கிருமி வேகமாகப் பரவக்கூடியது.
ஏற்கெனவே நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தத் திணறுவதால் இந்தோனேசியா தடை உத்தரவை அறிவித்தது.

(ஜனவரி 13ஆம் தேதி) நாளை மறுநாளிலிருந்து நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் போடவும் இந்தோனேசியா தயாராகியுள்ளது.

முதலில், ஜக்கர்த்தாவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகிறது. இரண்டு நாள்களுக்கு பிறகு மற்ற பகுதிகளிலும் அது தொடரும்.

முதல் தடுப்பூசியை இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ போட்டுகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.


 

Top