Images
  • Indonesia (1)
    படம்: AFP / CHAIDEER MAHYUDDIN

இந்தோனேசியா: 'கிருமித்தொற்று எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரிப்பு'

இந்தோனேசியாவில் கிருமிப்பரவல் மிகவும் மோசமடைந்துவருவதாக அந்நாட்டு COVID-19 பணிக்குழு தெரிவித்துள்ளது.

சென்ற வாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்ததை அது சுட்டியது.


இந்தோனேசியாவில் புதிதாக 4,200க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. அவர்களையும் சேர்த்து 478,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருமித்தொற்றால் மேலும் 110 பேர் உயிர் இழந்ததையடுத்து, மாண்டோரின் மொத்த எண்ணிக்கை 15,500 தாண்டியது.

Top