Images
  • Lion air found
    படம்: Reuters

Lion Air விபத்து: குரல் பதிவுப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஜாவா கடலில் மூழ்கிய Lion Air விமானத்தின் விமானி அறைக் குரல் பதிவுப் பெட்டியை இந்தோனேசியா கண்டுபிடித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேல் அது தேடப்பட்டு வந்தது.

கடந்த அக்டோபர் 29ஆம் தேதி ஜாவா கடலில் மூழ்கியது Lion Air நிறுவனத்தின் Boeing 737 MAX ரக விமானம். அதில் 189 பேர் மாண்டனர்.

குரல் பதிவுப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அது இருக்கும் இடம் குறித்த கூடுதல் விவரம் ஏதும் இன்னும் என்று இந்தோனேசியாவின் போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் துணைத் தலைவர் ஹார்யோ சாமிக்கோ தெரிவித்தார்.

Boeing 737 MAX ரக விமானம் விபத்துக்குள்ளானது அதுவே முதல்முறை.

Top