Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா, கிழக்குத் திமோரில் வெள்ளம், நிலச்சரிவு; தொடரும் தேடல் பணி

இந்தோனேசியாவிலும் கிழக்குத் திமோரிலும் திடீர் வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும்  காணாமற்போனவர்களைத் தேடி மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா, கிழக்குத் திமோரில் வெள்ளம், நிலச்சரிவு; தொடரும் தேடல் பணி

படம்: AFP / HANDRIANUS EMANUEL

இந்தோனேசியாவிலும் கிழக்குத் திமோரிலும் திடீர் வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் காணாமற்போனவர்களைத் தேடி மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை பெய்த கனத்தமழையை அடுத்து அந்தப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

குறைந்தது 70 பேரைக் காணவில்லை.

நூற்றுக்கும் அதிகமானோர் மாண்டனர்.

ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டோருக்கு உதவ, சுமார் 180,000 டாலர் வழங்கவிருப்பதாக இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சூறாவளியின் வேகம் இன்று சற்று தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது ஆஸ்திரேலியாவை நோக்கி நகர்வதாக வானிலைத் தகவல்கள் தெரிவித்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்