Images
  • jakarta
    (படம்: Reuters)

காட்டுக்குள் ஒளிந்திருக்கும் இந்தோனேசியாவின் எதிர்காலத் தலைநகரம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பொர்னியோ தீவின் ஒரு தொலைதூரப் பகுதி உலக நகரமாக விரைவில் உருமாறவுள்ளது. தற்போது காட்டுப் பகுதியாக இருக்கும் அங்கு வானுயரக் கட்டடங்கள் அமையவுள்ளன.

இந்தோனேசியாவின் புதிய தலைநகரம் அங்கு அமையவிருப்பது அதற்குக் காரணம்.

தற்போதைய தலைநகர் ஜக்கர்த்தாவில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

தூய்மைக்கேட்டின் பிடியில் ஜக்கர்த்தா சிக்கியுள்ளது. அதே நேரத்தில் கடலுக்குள்ளும் மெதுவாக மூழ்கி வருகிறது. அதன் காரணமாகத் தான் இந்தோனேசியா அதன் அரசாங்க அலுவலங்களை பொர்னியோ தீவில் உள்ள கிழக்குக் கலிமந்தான் மாநிலத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளது.
 

Top