Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா: கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியது

இந்தோனேசியா: கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியது

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா: கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியது

(கோப்புப் படம்: REUTERS/Ajeng Dinar Ulfiana)

இந்தோனேசியாவில், கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை அரை மில்லியனை எட்டியுள்ளது.

தென்கிழக்காசியாவில் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தோனேசியா.

அதிகமானோர் வசிக்கும் ஜாவா போன்ற வட்டாரங்களில் மருத்துவமனைப் படுக்கைகள் நிரம்பியுள்ளன.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

நாட்டில் போதிய எண்ணிக்கையில் மருத்துவச் சோதனை நடைபெறவில்லை; தொடர்புத் தடங்களும் கண்டறியப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டினர்.

இந்தோனேசியப் பொருளியல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

COVID-19க்கு எதிரான பணிக்குழு கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் அதேவேளையில் பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo) உத்தரவிட்டுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்