Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா: பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை அதிகரிக்கும்படி உத்தரவு

அந்தச் சட்டம், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைக் கொண்டுள்ளதாகக் கூறி, சில சமூக ஆர்வலக் குழுக்கள் மனுவைச் சமர்ப்பித்தன.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவில் பெண்கள் திருமணம் செய்துகொள்ள நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச வயதை மாற்றும்படி, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

குழந்தைத் திருமணங்களை ஒழிப்பதற்கு அது வகைசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, பெண்கள் திருமணம் செய்துகொள்ள நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச வயது, 16.
ஆண்களுக்கு அது 19ஆது இருக்கிறது.

அந்தச் சட்டம், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைக் கொண்டுள்ளதாகக் கூறி, சில சமூக ஆர்வலக் குழுக்கள் மனுவைச் சமர்ப்பித்தன.

அதனைத் தொடர்ந்து, சட்டத்தில் திருத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டத்திருத்தம் செய்ய, அரசாங்கத்துக்கு மூவாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்