Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கேலிச்சித்திரமாக வேடமிட்டு,10 கிலோமீட்டர் நடந்து குடும்பத்திற்குச் சம்பாதிக்கும் சிறுவன்

கேலிச்சித்திரமாக வேடமிட்டு,10 கிலோமீட்டர் நடந்து குடும்பத்திற்குச் சம்பாதிக்கும் சிறுவன்

வாசிப்புநேரம் -
கேலிச்சித்திரமாக வேடமிட்டு,10 கிலோமீட்டர் நடந்து குடும்பத்திற்குச் சம்பாதிக்கும் சிறுவன்

(படம்: rhmadii__ / Instagram)

இந்தோனேசியாவின் தென் கலிமந்தான் (South Kalimantan) மாநிலத்தில் 9 வயதுச் சிறுவன் ஒருவன் தினமும் கேலிச்சித்திரக் கதாபாத்திரம்போல் வேடமிட்டு அன்றாடம் 10 கிலோமீட்டர் நடந்து குடும்பத்திற்கு வருமானம் ஈட்டுகிறான்.

அவனுடைய கடின உழைப்பும் குடும்பத்திற்காகப் பாடுபடும் நோக்கமும் பலரின் மனத்தை உருக்கியது.

அந்தச் சிறுவன் தனது தலையைத் தொங்கவிட்டுச் சோர்வாக உட்கார்ந்திருக்கும் படம் இணையத்தில் பரவியது.

அவனது தாயாருக்கு நிலையான சம்பளம் கிடையாது. அதைக் கொண்டு வீட்டு வாடகை மட்டுமே செலுத்த முடியும்.

அதனால், தினசரிச் செலவுகளுக்கும் படிப்புச் செலவுக்கும் அந்தச் சிறுவனே உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று இந்தோனேசியாவின் Serambinews தெரிவித்தது.

தனது தாயாருக்கு உதவுவதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்வதாகக் கூறிய அந்தச் சிறுவன், தினமும் 10 கிலோமீட்டர் நடப்பதால், சில சமயம் சோர்வடைவதாகக் கூறினான்.

சிறு வயதிலேயே இவ்வளவு பொறுப்பாக நடந்துகொள்ளும் சிறுவனுக்கு உள்ளூர் மக்கள் உதவ வேண்டும் என்று இணையவாசிகள் பலரும் கேட்டுக்கொண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்