Images
  • indonesia (1)
    படம்: REUTERS

இந்தோனேசியா: முகக்கவசம் அணியாததால் சவக்குழி தோண்டும் தண்டனை

இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாத 8 பேருக்கு, சவக்குழி தோண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க, முகக்கவசம் அணிவது அவசியமான ஒன்று.

ஆனால், இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாமல் பலரும் பொது இடங்களில் அவ்வப்போது வலம்வருகின்றனர்.

மக்கள் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்க, இந்தோனேசிய அரசாங்கம் பல வித்தியாசமான வழிகளைக் கையாண்டு வருகிறது.

ஆனாலும் பலர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதில்லை.

கிழக்கு ஜாவாவில உள்ள ஒரு கிராமத்தில் அவ்வாறு முகக் கவசமின்றிச் சுற்றித் திரிந்த 8 பேருக்கு, அதிகாரிகள் சவக்குழி தோண்டும் தண்டனை விதித்தனர்.

அந்த சம்பவம் கடந்த வாரம் நடந்தது.

கிருமித்தொற்றால் மாண்டவர்களின் சடலங்களைப் புதைப்பதற்கே அந்தச் சவக்குழிகள் தோண்டப்பட்டன.

கிருமித்தொற்றால் அதிகமானோர் மாண்டுவருவதாகக் கூறிய அதிகாரிகள், உள்ளூரில் சவக்குழி தோண்ட போதிய ஆள்கள் இல்லை என்றனர்.

எனவே, முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிவோருக்குப் புதைகுழி தோண்டும் தண்டனை தரப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஏபரல் மாதத் தொடக்கத்திலிருந்தே, பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை இந்தோனேசியா கட்டாயமாக்கியது.  

Top