Images
  • Indonesia Prisons
    (படம்: REUTERS/Darren Whiteside)

இந்தோனேசியாவில் தீவிரவாதிகளைச் சமாளிக்க போதிய சிறைகள் இல்லை


இந்தோனேசியாவில், தீவிரவாதம் தொடர்பான குற்றங்களுக்காகக் கைதானோர் எண்ணிக்கையைச் சமாளிக்கும் அளவுக்கு அங்கு சிறைகள் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்தோனேசியாவில் தளம் கொண்டுள்ள, பூசல்கள் தொடர்பான கொள்கைகளுக்கான ஆய்வு கழகம் அது பற்றி கூறியது.

தீவிரவாத நடவடிக்கைகளின் தொடர்பில், ஏற்கனவே குற்றம் நிரூபிக்கப்பட்ட அல்லது நீதிமன்ற விசாரணைகளுக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்களைத் தடுத்து வைக்கும் அதிகபட்சப் பாதுகாப்புள்ள சிறைகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்று அது குறிப்பிட்டது.

மே மாதம் சுரபாயாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து அதிகமான தீவிரவாதிகள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் கைதுசெய்யப்பட்டதும், தீவிரவாதத்துக்கு எதிரான சட்டம் கடந்த ஜூன் மாதம் வலுவாக்கப்பட்டதும் அதற்குக் காரணம்.

2017 ஜனவரிக்கும் 2019 டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் சிறையிலிருந்து விடுதலை பெற்ற அல்லது விடுதலை பெறவிருக்கும் 144 கைதிகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக ஆய்வுக் கழகம் சுட்டியது.

சிரியாவுடன் தொடர்புடைய மேலும் அதிகமான குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கும் இந்தோனேசியா தயாராக இருக்க வேண்டும் என அது கூறியது.

முன்னாள் கைதிகளிடையே ஐ. எஸ். தொடர்புகள் ஏற்படுவதைத் தடுக்கவும் அவர்கள் சிரியாவுடன் கொண்டுள்ள தொடர்புகளைக் கண்காணிக்கவும் இந்தோனேசியா தயாராக இருக்கவேண்டும் என்றும் ஆய்வுக் கழகம் சொன்னது.  

Top