Images
  • ugcs
    படம்: USGS

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மலுக்கு தீவுகளை (Maluku islands) 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவ்வட்டார மக்கள் பதற்றத்தில் வீடுகளை விட்டுச் சாலைகளுக்கு ஓடினர்.

சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

நிலநடுக்கம் மாலை ஆறரை மணியளவில் ஏற்பட்டதாகவும், அது மலுக்கு தீவுகளிலிருந்து சுமார் 165 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையங்கொண்டிருந்ததாகவும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.

நிலநடுக்கம் பலமான ஒன்று என்றும், தற்போது மக்கள் சாலையோரங்களில் காத்திருப்பதாகவும் பேரழிவு மீட்புப்பணி அதிகாரி கூறினார்.

சேதம், உயிரிழப்பு குறித்து உடனடித் தகவல் ஏதும் இல்லை.

 

Top