Images
  • 25Feb INDONESIAN PRESIDENT JOKO WIDODO ARRIVES IN AUSTRALIA (1)

தலைநகரைக் கலிமந்தானுக்கு மாற்ற இந்தோனேசிய அதிபர் அதிகாரத்துவப் பரிந்துரை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

நாட்டின் தலைநகரை ஜக்கர்த்தாவிலிருந்து கலிமந்தானுக்கு மாற்றுவது தொடர்பில் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ அதிகாரபூர்வமாகப் பரிந்துரைத்திருக்கிறார்.

இருப்பினும் கலிமந்தானில் எந்த இடம் என்று அவர் குறிப்பிடவில்லை.

நாட்டு நடப்பு உரையில் அதிபர் விடோடோ அந்தப் பரிந்துரையை வெளியிட்டார்.

இந்தோனேசியாவில் மனிதவளம் மேம்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இயற்கை வளம், கனிம வளம் ஆகியவற்றுக்கான தொழிற்சாலைகளை அமைக்கக் கூடுதல் முயற்சிகள் தேவை என்றார் அவர்.

தமது பதவிக் காலத்தின் இரண்டாம் தவணைக்கான திட்டங்களை அவர் இன்றைய உரையில் எடுத்துரைத்தார்.

வறட்சி தொடர்பான வரவு, செலவுத் திட்டத்தையும் திரு. விடோடோ இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Top